يَجِيءُ القُرْآنُ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ، فَيُلْبَسُ تَاجَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ، وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً “:
«هَذَا حَدِيثٌ حَسَنٌ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ، وَلَمْ يَرْفَعْهُ.
«وهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنْ حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ»
2915. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) குர்ஆன் வந்து, “என் இறைவா! (குர்ஆனைக் கற்று அதன்படி செயல்பட்ட) இந்த மனிதரை அலங்கரிப்பாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் கிரீடம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இன்னும் அதிகப்படுத்துவாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் உயர்ரக ஆடை அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இவரைப் பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும். எனவே அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வான்.
மேலும் அவரிடம், குர்ஆனை ஓதுவீராக! உயர்வாயாக! என்று கூறப்படும். (எனவே அவர் ஓதுவார்). அவர் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவருக்கு அந்தஸ்து அதிகமாக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (ஃகுன்தர்) அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.
மேற்கண்ட-ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் அவர்களின் செய்தியை விட, அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ள இந்த செய்தியே (நம்முடைய பார்வையில்) மிகச் சரியானதாகும்.