«مَا مِنْ رَجُلٍ لَا يُؤَدِّي زَكَاةَ مَالِهِ إِلَّا جَعَلَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ فِي عُنُقِهِ شُجَاعًا»، ثُمَّ قَرَأَ عَلَيْنَا مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ} [آل عمران: 180] الآيَةَ، وقَالَ مَرَّةً: قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِصْدَاقَهُ: سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ القِيَامَةِ
وَمَنْ اقْتَطَعَ مَالَ أَخِيهِ المُسْلِمِ بِيَمِينٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ، ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللَّهِ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} [آل عمران: 77] الْآيَةَ.
3012.
…எந்த மனிதர் தனது செல்வத்திற்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையோ, அவருக்கு மறுமை நாளில் அல்லாஹ் ஒரு விஷப் பாம்பைக் கழுத்தில் மாலையாக ஆக்கிவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
இதன் உண்மைக்கான சான்றாக, “அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர், அது தங்களுக்கு நல்லது என்று ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்கேயாகும். அவர்கள் கஞ்சத்தனம் செய்த செல்வங்கள் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் மாலையாகப் போடப்படும்” (அல்குர்ஆன் 3:180) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஒரு முஸ்லிம் சகோதரனின் செல்வத்தை அபகரித்துக் கொள்கிறாரோ, அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அல்லாஹ் அவர் மீது கோபமாக இருப்பான்.” பின்னர், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து இதன் உண்மைக்கான சான்றாக, “நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையையும், தங்கள் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ…” (அல்குர்ஆன் 3:77) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
…