«اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي البَقَرَةِ: {يَسْأَلُونَكَ عَنِ الخَمْرِ وَالمَيْسِرِ} [البقرة: 219]، فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43]، فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ بَيِّنَ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي المَائِدَةِ: {إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ العَدَاوَةَ وَالبَغْضَاءَ [ص:254] فِي الخَمْرِ وَالمَيْسِرِ} [المائدة: 91]- إِلَى قَوْلِهِ – {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»
«وَقَدْ رُوِيَ عَنْ إِسْرَائِيلَ هَذَا الْحَدِيثُ مُرْسَلًا» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، قَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ فَذَكَرَ نَحْوَهُ «وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ يُوسُفَ»
3049. (மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன்) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:219) என்ற ஸூரத்துல் பகராவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!” (அல்குர்ஆன் 4:43) என்ற ஸூரத்துன் நிஸாவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91) என்ற (ஸூரத்துல் மாயிதாவின்) வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. இந்த வசனத்தைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் விலகிக் கொண்டோம்; நாங்கள் விலகிக் கொண்டோம்” என்று கூறினார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்)