«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الجَدَلَ»، ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الآيَةَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]
பாடம்:
அத்தியாயம்: 43
அஸ்ஸுக்ருஃப்.
3253. “ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இந்தச் செய்தியை, ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களின் ஹதீஸ் மூலமாக மட்டுமே நாம் அறிகிறோம். ஹஜ்ஜாஜ் அவர்கள் நம்பகமானவர்; அவரின் ஹதீஸ்கள் நடுநிலையானவை.
இதில் இடம்பெறும் அபூ ஃகாலிப் அவர்களின் இயற்பெயர் “ஹஸவ்வர்” என்பதாகும்.