🔗

திர்மிதி: 3398

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ رَأْسِهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ – أَوْ تَبْعَثُ – عِبَادَكَ»


3398. ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால், தமது கையைத் தமது தலைக்குக் கீழே வைத்துக்கொண்டு, “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தஜ்மவு இபாதக (அல்லது) அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக”

(பொருள்: அல்லாஹ்வே! உன்னுடைய அடியார்களை நீ ஒன்றுதிரட்டும் – அல்லது உயிர்ப்பித்து எழுப்பும் – நாளில், உன்னுடைய வேதனையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!)

என்று கூறுவார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.