🔗

திர்மிதி: 3426

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ: بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، يُقَالُ لَهُ: كُفِيتَ، وَوُقِيتَ، وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ


பாடம்:

வீட்டிலிருந்து வெளியேறும் போது என்ன கூற வேண்டும்?

3426. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “நீ பொறுப்பேற்கப்பட்டாய்! பாதுகாக்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும். மேலும் ஷைத்தான் அவரை விட்டு வெகுதூரத்தில் சென்று விடுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)