مَنْ جَلَسَ فِي مَجْلِسٍ فَكَثُرَ فِيهِ لَغَطُهُ، فَقَالَ قَبْلَ أَنْ يَقُومَ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي مَجْلِسِهِ ذَلِكَ
பாடம்: 39
சபையிலிருந்து எழும் போது சொல்லும் (இறைத்துதிச்) சொற்கள்.
3433. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சபையில் அமர்ந்து அதில் பயனற்ற (பாவப்) பேச்சுகளை அதிகம் பேசிவிட்டால், அந்நிலையில் அந்தச் சபையிலிருந்து அவர் எழும் முன்பாக, “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃக்ஃபிருக்க வஅத்தூபு இலைக்க)
(பொருள்: யா அல்லாஹ்! உன்னைத் தூயவன் என்று போற்றுகின்றேன் உன்னைப் புகழ்கின்றேன்; உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சான்று கூறுகின்றேன். உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன். உன்னிடமே பாவமீட்சி பெற்று திரும்புகின்றேன்)
என்று கூறினால் அந்தச் சபையில் இருக்கும் போது ஏற்பட்ட பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி அபூபர்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேற்கண்ட அபூஹுரைரா (ரலி) வழியாக ஸுஹைல் பின் ஸாலிஹ் அறிவிக்கும்) இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்ததாகும். ஸுஹைல் பின் ஸாலிஹ் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம்.