أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»
பாடம்:
இடி சத்தத்தைக் கேட்கும்போது ஓத வேண்டியவை.
3450. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடி, மின்னல்களின் சத்தத்தைக் கேட்டால், “அல்லாஹும்ம லா தக்துல்னா பி ஃகளபிக, வலா துஹ்லிக்னா பி அதாபிக, வ ஆஃபினா கப்ல தாலிக”
(பொருள்: அல்லாஹ்வே! உனது கோபத்தால் எங்களைக் கொன்றுவிடாதே; உனது தண்டனையால் எங்களை அழித்துவிடாதே; அதற்கு முன்பாகவே எங்களுக்குச் சுகமளிப்பாயாக!)
என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் ‘ஃகரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்ததாகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரிலேயே நாம் அறிகிறோம்.