قِيلَ يَا رَسُولَ اللَّهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوبَاتِ».
3499. அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பிரார்த்தனை அதிகம் செவியேற்கப்படும் (ஏற்றுக்கொள்ளப்படும்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவின் கடைசிப் பகுதியிலும், கடமையான தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் தர ஹதீஸாகும்.
“இரவின் கடைசிப் பகுதியில் செய்யப்படும் துஆ மிகச் சிறந்தது அல்லது அதிகம் எதிர்பார்க்கப்படக்கூடியதாக உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கருத்தில் வேறு அறிவிப்புகளும் உள்ளன.