🔗

திர்மிதி: 358

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةً: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَرَجُلٌ سَمِعَ حَيَّ عَلَى الفَلَاحِ ثُمَّ لَمْ يُجِبْ


பாடம்:

மக்களின் வெறுப்பிற்குரியவர் தொழுகை நடத்துவது பற்றி வந்துள்ளவை.

358. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூவரை சபித்தார்கள்.

அவர்கள்:

1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

2 . கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்.

3 . (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளில் உள்ள செய்தி இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அனஸ் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி சரியானதல்ல. ஏனெனில் இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்கள் வழியாக (முர்ஸலாக) நபித்தோழர் விடப்பட்டு வந்துள்ளது. இதில் இடம்பெறும் முஹம்மது பின் அல்காஸிம் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் விமர்சித்துள்ளார். மேலும் இவர் ஹாஃபிள்.. அல்ல.

இந்த செய்தியின் படி, மக்களின் வெறுப்பிற்குள்ளானவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என கல்வியாளர்களில் சிலர் கூறியுள்ளனர்.

இமாம், அநியாயக்காரராக இல்லாமல் இருந்து அவரை வெறுத்தால் அதன் குற்றம் வெறுத்தவர்களையேச் சேரும்.

இமாமை ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ வெறுத்தால் அவர் மக்களுக்கு தொழுகை நடத்துவது தவறல்ல. ஆனால் அதிகமானோர் வெறுத்தால் அவர் தொழுகை நடத்துவது வெறுப்பிற்குரிய செயல் என இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் கூறியுள்ளனர்.