🔗

திர்மிதி: 3585

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


3585. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது அரிதான செய்தியாகும். இதில் வரும் ஹம்மாத் பின் அபூஹுமைத் என்பவரின் (பிரபல்யமான) பெயர், முஹம்மது பின் அபூஹுமைத் என்பதாகும். இவரின் புனைப்பெயர் அபூஇப்ராஹீம் அல்அன்ஸாரீ, அல்மதனீ என்பதாகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் பலமானவர் அல்ல.