ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: العَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ
360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன அடிமை, அவன் திரும்பி வரும் வரை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் உள்ள அரிதான செய்தியாகும். மேலும் இதில் இடம்பெறும் அபூஃகாலிப் என்பவரின் பெயர் ஹஸவ்வர் என்பதாகும்.