🔗

திர்மிதி: 3604/7

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

كَانَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم يَدْعُو فَيَقُولُ: اللهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي وَاجْعَلْهُمَا الوَارِثَ مِنِّي, وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي, وَخُذْ مِنْهُ بِثَأْرِي.


பாடம்:

3604/7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா மய் யள்லிமுனீ, வகுத் மின்ஹு பிஸஃரீ” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! என் செவியையும், என் பார்வையையும், எனக்குப் பயனுள்ளவையாக ஆக்குவாயாக! அவ்விரண்டையும் என் வாரிசாக (அதாவது நான் மரணிக்கும் வரை சரியாக இயங்குபவையாக) அமைத்துத் தருவாயாக! எனக்கு அநீதி இழைத்தவனுக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! மேலும் என் சார்பில் அவனை நீயே பழிவாங்கிக் கொள்வாயாக!)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.