🔗

திர்மிதி: 3643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ بِرَأْسِي وَدَعَا لِي بِالبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، فَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى الخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الحَجَلَةِ»


பாடம்:

நபித்துவ முத்திரை.

3643. ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை என் தாயின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்(து மிச்சம் வைத்)த தண்ணீரில் நான் சிறிது குடித்தேன்.

பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்றேன். அப்போது அவர்களுடைய தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அஸ்ஸிர்ரு என்ற வார்த்தை புறாவின் முட்டைக்கும் கூறப்படும்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஸல்மான் ஃபார்ஸீ (ரலி), குர்ரா பின் இயாஸ் (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), அபூரம்ஸா (ரலி), புரைதா அல்அஸ்லமீ (ரலி), அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), அம்ர் பின் அக்தப் (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தியின் இந்த வகை அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.