بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ بَقَرَةً، إِذْ قَالَتْ: لَمْ أُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ»
قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ
3677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மாட்டின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, மாடு திடீரென, “நான் இதற்காகப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் விவசாயத்திற்காகப் படைக்கப்பட்டேன்” என்று பேசியது.
மேலும், “நானும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
அந்தநேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை. (அவர்கள் நம்புவார்கள் என்பதாலே நபி (ஸல்) அவர்கள் அப்படி கூறினார்கள்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.