«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الخَطَّابِ»
قَالَ: وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ
பாடம்:
அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்:
3681. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.
அவ்விருவரில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவராக ஆகிவிட்டார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்னு உமர் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.