«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ» قَالَ: فَأَصْبَحَ فَغَدَا عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ
(துணைப் பாடம்)
3683. “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.
காலை நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் நள்ர் பின் அப்துர்ரஹ்மான்-அபூஉமர் என்பவரை சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.