🔗

திர்மிதி: 3891

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

قِيلَ لِابْنِ عَبَّاسٍ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مَاتَتْ فُلَانَةُ لِبَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَجَدَ، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، فَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


பாடம்:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்புகள்.

3891. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று ஸுப்ஹ் தொழுகைக்குப் பின் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.