🔗

திர்மிதி: 3894

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ، قَالَتْ: بِنْتُ يَهُودِيٍّ، فَبَكَتْ، فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ»؟ فَقَالَتْ: قَالَتْ لِي حَفْصَةُ: إِنِّي بِنْتُ يَهُودِيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ، وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ، وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ، فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ؟» ثُمَّ قَالَ: «اتَّقِي اللَّهَ يَا حَفْصَةُ»


3894. ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒரு யூதனின் மகள் என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய செய்தி ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்குக் கிடைத்த போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் வந்த போது அவர்கள் அழுது கொண்டு இருந்ததை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் ஒரு யூதனின் மகள் என்று ஹஃப்ஸா என்னைப் பற்றி பேசியுள்ளர் என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீ யூதனின் மகள் இல்லை). நபியின் (பரம்பரையில் வந்த) மகள். உனது சிறிய தந்தையும் நபியாவார். நபியின் பொறுப்பில் நீ இருக்கிறாய். இவ்வாறிருக்க நாங்கள் உன்னிடத்தில் எப்படி பெருமையடித்துக் கொள்ள முடியும்? என்று கேட்டார்கள். பிறகு ஹஃப்ஸா (ரலி) அவர்களைப் பார்த்து ஹஃப்ஸாவே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)