🔗

திர்மிதி: 423

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ»


பாடம்: 198

சூரியன் உதயமான பின்னரும் ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.

423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம். இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இவ்வாறே ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்), அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

இதே அறிவிப்பாளர்தொடரில் மிகப் பரவலாக அறியப்பட்ட (பலமான) ஹதீஸ் (மஅரூஃப்) பின்வரும் ஹதீஸாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார்.