🔗

திர்மிதி: 428

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»


428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் லுஹ்ர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்களும், லுஹ்ர் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்களும் பேணி (தொடர்ந்து) தொழுது வருகிறாரோ அவரை நரகம் செல்ல விடாமல் அல்லாஹ் தடுப்பான்.

அறிவிப்பவர்: (நபி-ஸல்-அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர், “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) காஸிம் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் குறிப்புப் பெயர் அபூஅப்திர் ரஹ்மான் என்பதாகும். இவர், அப்துர் ரஹ்மான் பின் காலித் பின் யஸீத் பின் முஆவியா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையாவார்.

காஸிம் (ரஹ்) அவர்கள், ஷாம் (சிரியா) நாட்டைச் சேர்ந்த நம்பத்தகுந்த பலமான அறிவிப்பாளர் ஆவார். அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்களின் மாணவரும் ஆவார்.