«مَنْ صَلَّى بَعْدَ المَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»
435. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
“மஃக்ரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது. (இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி. பார்க்க: இப்னு மாஜா-1373 )
அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக வரும் மேற்கண்ட செய்தி உமர் பின் அபூ கஸ்அம் ( عمر بن عبد الله بن أبي خثعم) அவரிடமிருந்து ஸைத் பின் ஹுபாப் வழியாகவே வருகிறது. இமாம் புகாரி அவர்கள் உமர் பின் அபூ கஸ்அம் பற்றி இவர் நிராகரிக்கப்பட்டவர், மிக பலவீனமானவர் என்று கூற கேட்டுள்ளேன்.