🔗

திர்மிதி: 473

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ صَلَّى الضُّحَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ قَصْرًا مِنْ ذَهَبٍ فِي الجَنَّةِ»


பாடம்:

(ளுஹா எனும்) முற்பகல்நேரத் தொழுகை குறித்து வந்துள்ளவை.

473. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ளுஹாத் தொழுகையை 12 ரக்அத்களாக  தொழுதால், அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் தங்கத்தாலான மாளிகையை கட்டுகிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹானீ (ரலி), அபூஹுரைரா (ரலி), நுஐம் பின் ஹம்மார் (ரலி), அபூதர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்துஸ் ஸுலமீ (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி), அபூஸயீத் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அனஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ் “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.