«مَنْ حَافَظَ عَلَى شُفْعَةِ الضُّحَى غُفِرَ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»
476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (ளுஹா எனும்) முற்பகல் நேரத் தொழுகையின் இரண்டு ரக்அத்களை வழமையாக பேணித் தொழுதால் அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு (அதிகமாக) இருந்தாலும் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரிடமிருந்து வகீஃ பின் ஜர்ராஹ், நள்ர் பின் ஷுமைல் போன்ற சில அறிஞர்களும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரே (தனித்து) அறிவித்துள்ளார். (மற்ற எவரும் அறிவிக்கவில்லை) என்றே நாம் அறிகிறோம்.