🔗

திர்மிதி: 578

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فُضِّلَتْ سُورَةُ الحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»


பாடம்: 54

அல்ஹஜ் (எனும் 22 வது) அத்தியாயத்தில் ஓதலுக்கான ஸஜ்தா செய்வது குறித்து வந்துள்ளவை.

578. நான் (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! ஸஜ்தாவுக்குரிய இரண்டு வசனங்கள் (அல்குர்ஆன்: 22:1877) இல் இருப்பதால் ‘அல்ஹஜ்’ அத்தியாயம் சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்; யார் அவ்விரு வசனங்களை ஓதியும் ஸஜ்தா செய்யமாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் அந்தளவுக்கு பலமானதல்ல.

அல்ஹஜ் அத்தியாயத்தில் (எத்தனை வசனத்தில்) ஓதலுக்கான ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அல்ஹஜ் அத்தியாயத்தில் ஸஜ்தாவுக்குரிய இரு வசனங்கள் இடம் பெற்றிருப்பதன் காரணமாக அது சிறப்பிக்கப்பட்டுள்ளது” என உமர் பின் கத்தாப் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

அறிஞர்களில் வேறுசிலர், அந்த அத்தியாயத்தின் ஒரு வசனத்தில் (அல்குர்ஆன்: 22:18) மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் (ரஹ்), கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்துமாகும்.