🔗

திர்மிதி: 586

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ صَلَّى الغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ»


586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு அமர்ந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இதில் இடம்பெறும் அபூளிலால் என்பவர் பற்றி புகாரீ இமாமிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் (இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும்) முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் என்றும்; இவரின் பெயர் ஹிலால் என்றும் கூறினார்.