🔗

திர்மிதி: 629

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي العَسَلِ: «فِي كُلِّ عَشَرَةِ أَزُقٍّ زِقٌّ»


629.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடத்தில் அபூஹுரைரா (ரலி), அபூஸய்யாரா அல்முதிஈ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் ஹதீஸின் அறிவிப்புச் சங்கிலியில் விமர்சனம் உள்ளது. இந்தப் பாடத்தில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெரிய அளவில் எதுவும் ஆதாரப்பூர்வமாக வரவில்லை.

பெரும்பாலான கல்வியாளர்களின் நடைமுறை இதன்படியே உள்ளது. இதையே அஹ்மத் (ரஹ்) மற்றும் இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரும் கூறுகிறார்கள். சில கல்வியாளர்கள் தேனில் ஸகாத் இல்லை என்று கூறியுள்ளனர். ஸதகா பின் அப்தில்லாஹ் என்பவர் ஹாஃபிழ் தரத்தில் இல்லை. இந்த ஹதீஸை நாஃபிஃ (ரஹ்) வழியாக அறிவிப்பதில் ஸதகா பின் அப்தில்லாஹ்வுக்கு மாற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.