«مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ عَلَيْهِ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ»
பாடம்:
(தனக்கு) கிடைத்த ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கடக்கும் வரை ஸகாத் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.
631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு அல்லாஹ்விடம் ஜகாத் இல்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, ஸர்ராஃ பின்த் நப்ஹான் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.