أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَبْعَثُ عَلَى النَّاسِ مَنْ يَخْرُصُ عَلَيْهِمْ كُرُومَهُمْ وَثِمَارَهُمْ»
644.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இதே அறிவிப்புச் சங்கிலியில் நபி (ஸல்)அவர்கள் திராட்சை தோட்டங்களின் ஸகாத் பற்றி கூறினார்கள்: அது பேரீச்சை மரங்கள் மதிப்பீடு செய்யப்படுவது போன்று மதிப்பீடு செய்யப்படும், பின்னர் அதன் ஸகாத் பேரீச்சை மரங்களின் ஸகாத் பேரீச்சையாக கொடுக்கப்படுவது போன்று உலர் திராட்சையாக கொடுக்கப்படும்.
இது ஹஸன் கரீப் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்கள் இப்னு ஷிஹாப் வழியாக உர்வா வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இந்த ஹதீஸ் பற்றி நான் முஹம்மத் (எனும் புகாரி இமாம்) அவர்களிடம் கேட்டேன், அதற்கு அவர் கூறினார்: இப்னு ஜுரைஜின் ஹதீஸ் பாதுகாக்கப்பட்டதல்ல, இப்னுல் முஸய்யப் அவர்கள் அத்தாப் பின் அஸீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் மிகவும் உறுதியானதும் ஸஹீஹானதும் ஆகும்.