سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الصَّوْمِ أَفْضَلُ بَعْدَ رَمَضَانَ؟ فَقَالَ: «شَعْبَانُ لِتَعْظِيمِ رَمَضَانَ»، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «صَدَقَةٌ فِي رَمَضَانَ»
663. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஃபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் வரும் ஸதகா பின் மூஸா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் அந்தளவிற்கு பலமானவர் அல்ல.