🔗

திர்மிதி: 689

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ»


பாடம்:

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்பது குறித்து வந்துள்ளவை.

689. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய இப்பாடப் பொருள்தொடர்பான செய்திகள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி), ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் (ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.