🔗

திர்மிதி: 697

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»


பாடம்:

நீங்கள் நோன்பை விடும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது குறித்து வந்துள்ளவை.

697. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நோன்பு (வைக்கும்) நாள் என முடிவு செய்யும் நாள்தான் நோன்பு (வைக்கும்) நாள். நீங்கள் நோன்பை விடும்நாள் என முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும்நாள் என முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்திக் குறித்து கல்வியாளர்களில் சிலர் இதன் கருத்து, “நோன்பு வைப்பதும், நோன்பை விடுவதும் (முஸ்லிம்) ஜமாஅத்துடனும், அதிகமான மக்களுடனும் இருக்க வேண்டும் என்பதாகும்” என்று விளக்கம் கூறியுள்ளனர்.