أَنَّهُ سَأَلَهُ عَنِ الصَّوْمِ فِي السَّفَرِ، فَحَدَّثَ أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ قَالَ: «غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَتَيْنِ فِي رَمَضَانَ يَوْمَ بَدْرٍ، وَالفَتْحِ، فَأَفْطَرْنَا فِيهِمَا»
714.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தப் பாடத்தில் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தும் ஹதீஸ் உள்ளது.
உமர் (ரலி) அவர்களின் ஹதீஸை இந்த ஒரு வழியைத் தவிர வேறு வழியில் நாம் அறியவில்லை.
அபூசயீத் (ரலி) அவர்கள் வழியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது: நபி (ஸல்) அவர்கள் தாம் பங்கெடுத்த ஒரு போரில் நோன்பை விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்கள்.
உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தும் இது போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் எதிரிகளைச் சந்திக்கும்போது நோன்பை விட்டுவிட அனுமதி கொடுத்தார்கள்.
இதனையே சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.