«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ»
பாடம்:
ரமளானுடன் ஷஅபானை இணைத்து நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை.
736. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான், ரமளான் ஆகிய இரண்டு மாதங்களைத் தவிர, வேறு எந்த இரு மாதங்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட செய்தி “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.