🔗

திர்மிதி: 737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ كَانَ يَصُومُهُ إِلَّا قَلِيلًا بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ»،

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ،


737. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவுக்கு வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை.

அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர்த்து ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள்; இல்லை மாறாக முழுமையாகவும் நோன்பு நோற்பார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

இது பற்றி இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் விளக்கம்:

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள – بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ – “முழுமையாக நோன்பு நோற்பார்கள்” என்ற கருத்தைப் பற்றி கூறுகையில், ‘அரபி மொழியில் அதிகம் என்பதைக் குறிப்பிட இவ்வாறு கூறுவது வழமைதான். ஒருவர் ஒரு மாதத்தின் பெரும்பகுதியில் நோன்பு நோற்றால், “அவர் முழு மாதமும் நோன்பு நோற்றார்” என்று சொல்வது வழக்கம். அதுபோல, “ஒருவர் இரவு முழுவதும் தொழுதார்” என்று சொல்வதும் உண்டு. ஆனால் அவர் சிறிது நேரம் உணவு உட்கொண்டோ அல்லது வேறு சில காரியங்களில் ஈடுபட்டோ இருந்திருக்கலாம்.

எனவே இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இரு ஹதீஸ்களையும் இணைத்து (ஒத்துப்போகிறவாறு) புரிந்துள்ளார்கள். அவர்களின் கருத்துப்படி, ‘இந்த ஹதீஸின் பொருள்—நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் பெரும்பகுதியில் நோன்பு நோற்றார்கள் என்பதே.


முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவித்தவாறே ஸாலிம் பின் அபூஉமைய்யா-அபுன்நள்ர் (ரஹ்) அவர்களும் மற்றும் பலரும் அபூஸலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.