«صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ»
749.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இத்தலைப்பில் அபூஸயீத் (ரலி) வழியாகவும் செய்தி வந்துள்ளது.
அபூகதாதா ரலி அவர்களின் ஹதீஸ் ஹஸன் தரத்தைச் சார்ந்ததாகும்.
அறிஞர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விரும்பத்தக்கதாகக் கருதியுள்ளனர். அரஃபாவில் தங்கியிருப்பவரைத் தவிர.