«الفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ، وَالأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ»
802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்புப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என மக்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
நான் முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்களிடம், முஹம்மது பின் முன்கதிர் அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) கேட்டுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்! அவர் அறிவிக்கும் ஹதீஸ்களில் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியேற்றேன் என்று கூறுகிறார் என்று பதிலளித்தார்கள்.
இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள, இந்த ஹதீஸ் “ஹஸன் ஃகரீப் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.