«تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ»
பாடம்:
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் நன்மைகள் குறித்து வந்துள்ளவை.
810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்யுங்கள். ஏனெனில் கொல்லனின் உலை எவ்வாறு இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் துருவை நீக்குமோ அது போன்று இவ்விரண்டும் ஏழ்மையையும், பாவங்களையும் அகற்றுகின்றது.
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி உமர் (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி), அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஹுப்ஷீ (ரலி), உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.