🔗

திர்மிதி: 812

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ البَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


பாடம்:

ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தியை இந்த வகை அறிவிப்பாளர் தொடரிலேயே நாம் அறிகின்றோம்.

இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. (காரணம்) இதில் இடம்பெறும் ஹிலால் பின் அப்துல்லாஹ் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.