🔗

திர்மிதி: 82

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ»


பாடம்:

ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்வது (அவசியம்).

82. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் தனது ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது.

அறிவிப்பவர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹபீபா (ரலி), அபூஅய்யூப் (ரலி), அபூஹுரைரா (ரலி), அர்வா பின்த் உனைஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து, ஹிஷாம் பின் உர்வா —> உர்வா பின் ஸுபைர் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே பலரும் அறிவித்துள்ளனர்.