«الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا، وَأَمَامَهَا، وَعَنْ يَمِينِهَا، وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»
3180. “வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் பின்னால் அல்லது முன்னால் அல்லது வலது, இடதுபுறமாக அருகில் (விரும்பியவாறு) செல்லலாம்.
விழு கட்டிகளுக்கும் (கருச்சிதைந்த சிசுவிற்காகவும்) தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோரின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இதை நபியின் சொல்லாக கூறினார்கள் என (என்னுடைய ஆசிரியரான) ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் குடும்பத்தார்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.
(நான் இதை ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் சொல்லாகவே மனனமிட்டுள்ளேன்)