“வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் பின்னால் அல்லது முன்னால் அல்லது வலது, இடதுபுறமாக அருகில் (விரும்பியவாறு) செல்லலாம்.
விழு கட்டிகளுக்கும் (கருச்சிதைந்த சிசுவிற்காகவும்) தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோரின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இதை நபியின் சொல்லாக கூறினார்கள் என (என்னுடைய ஆசிரியரான) ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் குடும்பத்தார்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று நான் நினைக்கிறேன்.
(நான் இதை ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் சொல்லாகவே மனனமிட்டுள்ளேன்)
(அபூதாவூத்: 3180)حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ يُونُسَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، وَأَحْسَبُ أَنَّ أَهْلَ زِيَادٍ أَخْبَرُونِي أَنَّهُ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا، وَأَمَامَهَا، وَعَنْ يَمِينِهَا، وَعَنْ يَسَارِهَا قَرِيبًا مِنْهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2766.
Abu-Dawood-Shamila-3180.
Abu-Dawood-Alamiah-2766.
Abu-Dawood-JawamiulKalim-2768.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். மேலும் சிலர் இதை நபியின் சொல்லாகவும், வேறு சிலர் நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.
1 . சிலர் இதை நபியின் சொல் என்பதற்கு முன்னுரிமை தருகின்றனர்.
இதற்கு காரணம் யூனுஸ் பின் உபைத் அவர்கள் கூறும் ஸியாத் பின் ஜுபைர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஸயீத் பின் உபைதுல்லாஹ், அவரின் சகோதரர் முஃகீரா பின் உபைதுல்லாஹ் ஆகியோர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். ஒருவரின் செய்தியை அவரின் குடும்பத்தாரே நன்கறிந்தவர்கள் என்பதின்படி யூனுஸ் பின் உபைத் அவர்கள் மிகப்பலமானவர் தான் என்றாலும் அவரின் குடும்பத்தாரின் அறிவிப்புக்கே முன்னுரிமை தர வேண்டும் என்கின்றனர்.
2 . வேறு சிலர் இதை நபித்தோழரின் சொல் என்பதற்கு முன்னுரிமை தருகின்றனர்.
இதை நபித்தோழரின் சொல் என்பதற்கு முன்னுரிமை தருவோர் இந்தவகை செய்தியை நபித்தோழர் சுயமாக கூறியிருக்கமாட்டார். நபி (ஸல்) அவர்களிடமிருந்தே கேட்டு கூறியிருப்பார் என்பதால் இதை ஹுக்முல் மர்ஃபூஃ-நபியின் சொல் போன்றது என்று கூறுகின்றனர்.
சட்ட சுருக்கம்:
பருவமடையாத சிறுவர், சிறுமியர், குறை மாதத்தில் பிறந்த சிசுக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவது பற்றி அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளது.
1 . கருவில் உள்ள சிசுவுக்கு 4 மாதம் முழுமையடைந்துவிட்டால் அதற்கு உயிர் தரப்படுகிறது என்ற கருத்தில் வந்துள்ள ஹதீஸின்படியும் (பார்க்க: புகாரி-7454), (கூடுதல் தகவலாக) மேற்கண்ட முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) அவர்களின் ஹதீஸின்படியும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்ற சில அறிஞர்கள் 4 மாத சிசுவுக்கும் குளிப்பாட்டி, ஜனாஸாத் தொழுகை நடத்தவேண்டும் என்று கூறுகின்றனர். இவர்கள், குழந்தை பிறக்கும்போது அது அழவேண்டும் என்பதையோ அல்லது உயிரோடு இருக்கவேண்டும் என்பதையோ நிபந்தனையாக வைக்கவில்லை. 4 மாதம் முழுமையடைவதற்குள் அது இறந்துவிட்டால் அதற்கு குளிப்பாட்டுதலும், ஜனாஸாத் தொழுகையும் இல்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இவர்களில் சிலர், 4 மாதம் முழுமையடைந்த சிசுவுக்கு ஜனாஸாத் தொழுகைத் தான் உள்ளதே தவிர இவர்களுக்காக அகீகா கொடுக்க வேண்டியதில்லை. இவர்களுக்கு வாரிசு சட்டம் இல்லை என்றும் கூறுகின்றனர்.
2 . வேறு சில அறிஞர்கள் குழந்தை பிறக்கும்போது அது உயிரோடு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அது சத்தமிடாவிட்டால்-அழாவிட்டால் அதாவது அது உயிரோடு பிறக்காவிட்டால் அதற்கு குளிப்பாட்டுதல், ஜனாஸாத் தொழுகை, வாரிசுரிமை போன்ற சட்டங்கள் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு அவர்கள், திர்மிதீ-1032 இல் வந்துள்ள ஹதீஸை ஆதாரமாக கூறுகின்றனர்.
3 . வேறு சில அறிஞர்கள் குழந்தைகள், குறை மாத சிசுக்களுக்கு தொழுகை நடத்தலாம்; நடத்தாமலும் இருக்கலாம். இவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவது வாஜிப்-கட்டாயம் என்ற சட்டத்தில் வராது என்று கூறுகின்றனர். இவர்கள், “நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை” (அபூதாவூத்-3187) போன்ற நூல்களில் வந்துள்ள செய்தியை ஆதாரமாக கூறுகின்றனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ் (3. பலமானவர்).
2 . வஹ்ப் பின் பகிய்யா (3. பலமானவர்).
3 . காலித் பின் அப்துல்லாஹ்-அத்தஹ்ஹான் (3. பலமானவர்).
4 . யூனுஸ் பின் உபைத்-அல்அப்தீ (2. மிகப் பலமானவர்).
5 . ஸியாத் பின் ஜுபைர் (3. பலமானவர்).
6 . ஜுபைர் பின் ஹய்யா-அஸ்ஸகஃபீ (3. பலமானவர்).
7 . முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) (1. நபித்தோழர்).
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (7/ 134)
1258- وسئل عن حديث زياد بن جبير، عن الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلِّي عَلَيْهِ.
فَقَالَ: يَرْوِيهِ زِيَادُ بْنُ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ الْجُبَيْرِيُّ، وَأَخُوهُ الْمُغِيرَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ زِيَادِ بْنِ جبير مرفوعا.
وَرَوَاهُ يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَفَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ الْمُزَنِيُّ، عَنْ يُونُسَ.
وَرَوَاهُ قَبِيصَةُ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ يُونُسَ فَشَكَّ فِي رَفْعِهِ،
وَوَقَفَهُ الْبَاقُونَ عَنْ يُونُسَ إِلَّا أَنَّ ابْنَ عُلَيَّةَ، وَعَنْبَسَةَ بْنَ عَبْدِ الْوَاحِدِ، قَالَا: عَنْ يُونُسَ، وَأَهْلُ زِيَادٍ يَرْفَعُونَهُ قَالَ يُونُسُ: وَأَمَّا أَنَا فَلَا أَحْفَظُ رَفْعَهُ.
1 . இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இதை ஸியாத் பின் ஜுபைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் உபைதுல்லாஹ், அவரின் சகோதரர் முஃகீரா பின் உபைதுல்லாஹ் ஆகியோர் ஸியாத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் ஹய்யா —> முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். (இப்னு மாஜா-1507 போன்றவை)
2 . ஸியாத் பின் ஜுபைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யூனுஸ் பின் உபைத் அவர்களின் மாணவர்கள் இதை கருத்துவேறுபாட்டுடன் அறிவித்துள்ளனர்.
1 . யூனுஸ் பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் பக்ர் அல்முஸனீ அவர்கள் யூனுஸ் பின் உபைத் —> ஸியாத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் ஹய்யா —> முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (அல்முஃஜமுல் கபீர்-17449)
2 . யூனுஸ் பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
3 . யூனுஸ் பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களும் ஒருவர். இவரிடமிருந்து அறிவிக்கும் கபீஸா அவர்கள் இதை நபியின் சொல்லா அல்லது நபித்தோழரின் சொல்லா என்பதை உறுதியாக அறிவிக்கவில்லை. சந்தேகத்துடன் அறிவித்துள்ளார். (குப்ரா பைஹகீ-6866)
4 . யூனுஸ் பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் உலய்யா-இப்னு உலய்யா, அன்பஸா பின் அப்துல்வாஹித் போன்ற வேறு சிலர் இதை யூனுஸ் பின் உபைத் அவர்கள் அறிவிக்கும்போது, “நான் இதை நபித்தோழரின் சொல்லாகவே மனனமிட்டுள்ளேன் என்றும், ஸியாத் பின் ஜுபைர் அவர்களின் குடும்பத்தார் இதை ஸியாத் அவர்கள் நபியின் சொல்லாக கூறினார் என்று தனக்கு அறிவித்தனர்” என்று யூனுஸ் அவர்கள் கூறிய தகவலையும் சேர்த்து அறிவித்துள்ளனர். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11589,
(நூல்: அல்இலலுல் வாரிதா-1258)
1 . இந்தக் கருத்தில் முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
நபி_யின் சொல்லாக வந்துள்ளவை:
- முபாரக் பின் ஃபளாலா, ஸயீத் பின் உபைதுல்லாஹ், முஃகீரா பின் உபைதுல்லாஹ், —> ஸியாத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் ஹய்யா —> முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-736, 737, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11253, 11583, அஹ்மத்-18162, 18174, 18207, இப்னு மாஜா-1507, திர்மிதீ-1031, நஸாயீ-1942, 1943, 1948, …
- ஸியாத் பின் ஜுபைர் —> முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: இப்னு மாஜா-1481,
நபித்_தோழரின் சொல்லாக வந்துள்ளவை:
- ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
இப்னு உலய்யா, காலித் பின் அப்துல்லாஹ், அபூஹம்மாம்—> யூனுஸ் பின் உபைத் —> ஸியாத் பின் ஜுபைர் —> ஜுபைர் பின் ஹய்யா —> முஃகீரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6602, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11589, அஹ்மத்-18181, அபூதாவூத்-3180, ஹாகிம்-1344, குப்ரா பைஹகீ-6780,
1 . இதை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
3 . கபீஸா பின் உக்பா அவர்கள் நபியின் சொல்லாக இருக்கலாம் என்று சந்தேகமாக அறிவித்துள்ளார்.
(அப்துர்ரஸ்ஸாக் —> ஸுஃப்யான் ஸவ்ரீ)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6602,
(அபூநுஐம் —> ஸுஃப்யான் ஸவ்ரீ)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-17447,
(கபீஸா பின் உக்பா —> ஸுஃப்யான் ஸவ்ரீ)
பார்க்க: குப்ரா பைஹகீ-6866, மஃரிஃபதுஸ் ஸுனன்-7503,
معرفة السنن والآثار (5/ 272)
7503 – وَأَمَّا حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ فِي «الرَّاكِبِ يَسِيرُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي يَمْشِي خَلْفَهَا وَأَمَامَهَا وَعَنْ يَمِينِهَا وَعَنْ يَسَارِهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَا لِأَبَوَيْهِ بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ» فَهُوَ فِيمَا: أَخْبَرَنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا الْبَاغَنْدِيُّ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: أُرَاهُ قَدْ رَفَعَهُ.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1012, ஹாகிம்-1314, அபூதாவூத்-3187,
சமீப விமர்சனங்கள்