2116. ஹுஸைன் பின் ஹாரிஸ் அல்ஜதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் (ரஹ்) அவர்கள் (பிறை தேடும்) சந்தேகத்திற்குரிய நாளில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் கேட்டேன். அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறையைக் கண்டதும் நோன்பு வையுங்கள். பிறையைக் கண்டதும் நோன்பை விடுங்கள். அதனடிப்படையில் குர்பானி வணக்கத்தை நிறைவேற்றுங்கள்.
உங்களுக்கு மேகம் மறைத்தால், முப்பது நாட்களாக (மாதத்தை) முழுமையாக்குங்கள்.
இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.
أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»
சமீப விமர்சனங்கள்