Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-407

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

407.


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا مَا صَارَمَا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا دَامَا عَلَى صِرَامِهِمَا، وَإِنَّ أَوَّلَهُمَا فَيْئًا يَكُونُ كَفَّارَةً لَهُ سَبْقُهُ بِالْفَيْءِ، وَإِنْ هُمَا مَاتَا عَلَى صِرَامِهِمَا لَمْ يَدْخُلَا الْجَنَّةَ جَمِيعًا»


Al-Adabul-Mufrad-8

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோரிடம் மென்மையாகப் பேசுதல்.

8. தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், (காரிஜிய்யாவின்-ஹரூரிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்திருந்தபோது சில பாவங்களை செய்துவிட்டேன். அவைகளை பெரும்பாவங்கள் என்று நான் கருதினேன். எனவே இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள், “அந்தப் பாவங்கள் எவை? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அவை இன்னின்ன பாவங்கள்” என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவைகள் பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும். அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . நியாயமின்றி கொலைசெய்வதும்,
3 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
4 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்,
5 . வட்டியை உண்பதும்,
6 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
7 . கஅபாவின் புனிதத்தை சீர்குழைப்பதும்,
8 . (கேலி கிண்டல் செய்வதும்; அல்லது) சூனியம் செய்வதும்,
9 . பெற்றோருக்கு தொல்லைத் தந்து அழவைப்பதும் ஆகும்

என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ நரகத்தை பயந்து; சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாயா? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக!” என்று கூறினேன். அதற்கவர்கள், உனது தந்தை உயிரோடு உள்ளாரா?

كُنْتُ مَعَ النَّجَدَاتِ، فَأَصَبْتُ ذُنُوبًا لَا أَرَاهَا إِلَّا مِنَ الْكَبَائِرِ، فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عُمَرَ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: لَيْسَتْ هَذِهِ مِنَ الْكَبَائِرِ، هُنَّ تِسْعٌ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ نَسَمَةٍ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَإِلْحَادٌ فِي الْمَسْجِدِ، وَالَّذِي يَسْتَسْخِرُ، وَبُكَاءُ الْوَالِدَيْنِ مِنَ الْعُقُوقِ. قَالَ لِي ابْنُ عُمَرَ: أَتَفْرَقُ النَّارَ، وَتُحِبُّ أَنْ تَدْخُلَ الْجَنَّةَ؟ قُلْتُ: إِي وَاللَّهِ، قَالَ: أَحَيٌّ وَالِدُكَ؟ قُلْتُ: عِنْدِي أُمِّي، قَالَ: فَوَاللَّهِ لَوْ أَلَنْتَ لَهَا الْكَلَامَ، وَأَطْعَمْتَهَا الطَّعَامَ، لَتَدْخُلَنَّ الْجَنَّةَ مَا اجْتَنَبْتَ الْكَبَائِرَ


Al-Adabul-Mufrad-1237

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

உண்ணி பூச்சிகளை சபிக்க வேண்டாம்.

1237. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது உண்ணி பூச்சியை சபித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  “அதை சபிக்காதீர்! ஏனெனில் நபிமார்களில் ஒரு நபியை தொழுகைக்காக அது எழுப்பியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


 أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Al-Adabul-Mufrad-715

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

715. வணக்கங்களில் சிறந்தது எதுவென நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعِبَادَةِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Al-Adabul-Mufrad-783

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

783.


قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، قَالَ: «جَعَلْتَ لِلَّهِ نِدًّا، مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»


Al-Adabul-Mufrad-780

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியாரை கைப்பற்ற அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)


إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ، جَعَلَ لَهُ بِهَا – أَوْ: فِيهَا – حَاجَةً


Al-Adabul-Mufrad-779

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஒருவரின் உதவி தேவையென்றால் அவரிடம் சாதாரணமாகக் கேட்க வேண்டும்; அவரைப் புகழக்கூடாது.

779. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவருக்கு (மற்றவரின் உதவி) தேவையிருந்தால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்துவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)


إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ، فَيَقْطَعَ ظَهْرَهُ


Al-Adabul-Mufrad-500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் எழுதப்படுதல்.

500. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோயாளிக்கு, அவர் ஆரோக்கியமான நிலையில் செய்த நற்செயல்கள் போன்றது (வானவர்களால்) எழுதப்படுகிறது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ أَحَدٍ يَمْرَضُ، إِلَّا كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ»


Al-Adabul-Mufrad-388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மக்களின் தீங்கை சகித்துக் கொள்ளுதல்.

388. “மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، خَيْرٌ مِنَ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ، وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


Al-Adabul-Mufrad-1093

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1093.


«لَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَنْظُرَ إِلَى جَوْفِ بَيْتٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ. وَلَا يَؤُمُّ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ حَتَّى يَنْصَرِفَ. وَلَا يُصَلِّي وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Next Page »