Category: ஹாகிம்

Hakim

Hakim-8727

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8727.


 سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي سَيِّئَاتِهِ وَيَتَجَاوَزَ لَهُ عَنْهَا، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ هَلَكَ، وَكُلَّمَا يُصِيبُ الْمُؤْمِنَ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ مِنْ سَيِّئَاتِهِ حَتَّى الشَّوْكَةَ تَشُوكُهُ»


Hakim-7671

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. அவற்றுள் ஏழு வாசல்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு வாசல் மட்டும் சூரியன் (மேற்கு) திசையில் உதிக்கும் வரை பாவமன்னிப்புக்காகத் திறந்தே இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«لِلْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ سَبْعَةٌ مُغْلَقَةٌ وَبَابٌ مَفْتُوحٌ لِلتَّوْبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ نَحْوِهِ»


Hakim-915

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

915. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு பெண் கீழாடை அணியாமல், மேலாடையும் துப்பட்டாவும் மட்டும் அணிந்து தொழலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த மேலாடை அவளது இரு பாதங்களின் மேல்பகுதியை மறைக்கும் அளவுக்கு நீளமாக இருந்தால் (தொழலாம்)” என்று கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் புகாரியின் நிபந்தனையின்படி உள்ள சரியான ஹதீஸாகும். ஆனால் புகாரீ, முஸ்லிம் ஆகிய இருவரும் இதனைப் பதிவு செய்யவில்லை.


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ، وَخِمَارٍ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟ قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا»


Hakim-3872

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3872. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலீத் பின் முஃகீரா என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். அதைக் கேட்டு வலீத் மனம் கனிந்தது போல் ஆனார். இந்தச் செய்தி அபூஜஹ்லுக்கு எட்டியது. உடனே அவன் அவரிடம் வந்து, “என் தந்தையின் சகோதரரே! உமக்குச் செல்வத்தைத் திரட்ட உமது சமூகத்தார் விரும்புகின்றனர்” என்றான்.

வலீத், “எதற்காக?” என்று கேட்டார். அபூஜஹ்ல், “அவர்கள் உமக்கு அதைக் கொடுப்பார்கள். நீங்களோ முஹம்மதுடைய செல்வத்தை பெறுவதற்காக அவரிடம் சென்றுள்ளீர்கள்” என்றான். அதற்கு வலீத், “நான் மக்காவிலேயே அதிகச் செல்வம் படைத்தவன் என்பதை குரைஷிகள் அறிவார்களே” என்றார்.

அபூஜஹ்ல், “அப்படியானால், முஹம்மதுடைய விஷயத்தில் நீ அதை மறுப்பவர் என்றோ அல்லது வெறுப்பவர் என்றோ உமது சமூகத்தார் அறியும் வண்ணம் ஏதாவது கூறுவீராக!” என்றான்.

வலீத், “நான் என்ன கூறுவது? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் கவிதைகளை என்னைவிட நன்றாக அறிந்தவர் யாருமில்லை; ‘ரஜஸ்’ மற்றும் ‘கஸீதா’ கவிதைகளையும், ஜின்களின் கவிதைகளையும் என்னைவிட நன்றாக அறிந்தவர் யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் கூறுவது இவற்றில் எதையுமே ஒத்திருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் கூறுவதற்கு

أَنَّ الْوَلِيدَ بْنَ الْمُغِيرَةِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ عَلَيْهِ الْقُرْآنَ، فَكَأَنَّهُ رَقَّ لَهُ فَبَلَغَ ذَلِكَ أَبَا جَهْلٍ، فَأَتَاهُ فَقَالَ: يَا عَمُّ، إِنَّ قَوْمَكَ يَرَوْنَ أَنْ يَجْمَعُوا لَكَ مَالًا. قَالَ: لَمَ؟ قَالَ: لِيُعْطُوكَهُ فَإِنَّكَ أَتَيْتَ مُحَمَّدًا لِتُعْرِضَ لِمَا قِبَلَهُ قَالَ: قَدْ عَلِمَتْ قُرَيْشٌ أَنِّي مِنْ أَكْثَرِهَا مَالًا. قَالَ: فَقُلْ فِيهِ قَوْلًا يَبْلُغُ قَوْمَكَ أَنَّكَ مُنْكِرٌ لَهُ أَوْ أَنَّكَ كَارِهٌ لَهُ قَالَ: وَمَاذَا أَقُولُ «فَوَاللَّهِ مَا فِيكُمْ رَجُلٌ أَعْلَمَ بِالْأَشْعَارِ مِنِّي، وَلَا أَعْلَمَ بِرَجَزٍ وَلَا بِقَصِيدَةٍ مِنِّي وَلَا بِأَشْعَارِ الْجِنِّ وَاللَّهِ مَا يُشْبِهُ الَّذِي يَقُولُ شَيْئًا مِنْ هَذَا وَوَاللَّهِ إِنَّ لِقَوْلِهِ الَّذِي يَقُولُ حَلَاوَةً، وَإِنَّ عَلَيْهِ لَطَلَاوَةً، وَإِنَّهُ لَمُثْمِرٌ أَعْلَاهُ مُغْدِقٌ أَسْفَلُهُ، وَإِنَّهُ لَيَعْلُو وَمَا يُعْلَى وَإِنَّهُ لَيَحْطِمُ مَا تَحْتَهُ» قَالَ: لَا يَرْضَى عَنْكَ قَوْمُكَ حَتَّى تَقُولَ فِيهِ. قَالَ: فَدَعْنِي حَتَّى أُفَكِّرَ، فَلَمَّا فَكَّرَ قَالَ: ” هَذَا سِحْرٌ يُؤْثَرُ يَأْثُرُهُ مِنْ غَيْرِهِ فَنَزَلَتْ {ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا} [المدثر: 11]


Hakim-7509

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7509. ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு ‘அஸ்ஸகர்’ (மதுபானம்) மருந்துப் பொருளாகப் பரிந்துரைக்கப்பட்டது. அவர் அதைப்பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ், தான் தடை செய்த பொருட்களில் உங்களுக்கு எந்த நிவாரணத்தையும் ஆக்கவில்லை” என்று கூறினார்கள்.


اشْتَكَى رَجُلٌ بَطْنَهُ مِنَ الصَّفَرِ فَنُعِتَ لَهُ السَّكَرِ فَذَكَرَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ، فَقَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ»


Hakim-6974

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6974. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்ஸாரிகளின் தலைவரான உஸைத் பின் ஹுளைர் அல்அஷ்ஹலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் (ஏற்கெனவே தங்களிடம் இருந்த) உணவைப் பங்கீடு செய்திருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் பனூளஃபர்குலத்தைச் சேர்ந்த ஒரு வீட்டார் வறுமையில் இருப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டது.

(அனஸ் ரலி கூறுகிறார்கள்:) அந்த வீட்டார் பெரும்பாலானோர் பெண்களாவே இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “உஸைரே! எங்களிடம் இருந்தவை தீரும் வரை எங்களை நீர் விட்டுவிட்டீரே! எனவே, எங்களிடம் ஏதேனும் (பொருள்) வந்ததாகச் செவியுற்றால், அந்த வீட்டை எனக்கு ஞாபகப்படுத்துவீராக!” என்று கூறினார்கள்.

(அனஸ் ரலி கூறுகிறார்கள்:) அதற்குப் பிறகு கைபர் பகுதியிலிருந்து (உணவுப் பொருளான) பார்லியும் பேரீச்சம்பழமும் வந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கும் பங்கீடு செய்தார்கள்; அன்ஸாரிகளுக்கும் வாரி வழங்கினார்கள்; அந்த வீட்டட்டாருக்கும் வாரி வழங்கினார்கள்.

உடனே உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் நன்றியுணர்வுடன், “அல்லாஹ்வின் நபியே! எங்கள் சார்பாக அல்லாஹ் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்குவானாக!” அல்லது “நன்மையை வழங்குவானாக!” என்று கூறினார்கள்.

அப்போது

جَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ الْأَشْهَلِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ كَانَ قَسَمَ طَعَامًا فَذَكَرَ لَهُ أَهْلَ بَيْتٍ مِنَ الْأَنْصَارِ مِنْ بَنِي ظَفَرٍ فِيهِمْ حَاجَةٌ، قَالَ: وَجُلُّ أَهْلِ ذَلِكَ الْبَيْتِ نِسْوَةٌ، قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكْتَنَا يَا أُسَيْدُ حَتَّى ذَهَبَ مَا فِي أَيْدِينَا، فَإِذَا سَمِعْتَ بِشَيْءٍ قَدْ جَاءَنَا فَاذْكُرْ لِي أَهْلَ ذَلِكَ الْبَيْتِ» قَالَ: فَجَاءَهُ بَعْدَ ذَلِكَ طَعَامٌ مِنْ خَيْبَرَ شَعِيرٌ وَتَمْرٌ، قَالَ: فَقَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، وَقَسَمَ فِي الْأَنْصَارِ فَأَجْزَلَ، وَقَسَمَ فِي أَهْلِ ذَلِكَ الْبَيْتِ فَأَجْزَلَ قَالَ: فَقَالَ لَهُ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ: مُتَشَكَّرٌ، أَجْزَاكَ اللَّهُ أَيْ نَبِيَّ اللَّهِ عَنَّا أَفْضَلَ الْجَزَاءِ – أَوْ قَالَ: خَيْرًا – فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنْتُمْ يَا مَعْشَرَ الْأَنْصَارِ، فَجَزَاكُمُ اللَّهُ أَطْيَبَ الْجَزَاءِ – وَقَالَ خَيْرًا – فَإِنَّكُمْ مَا عَلِمْتُ أَعِفَّةٌ صُبُرٌ وَسَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فِي الْأَمْرِ وَالْقَسْمِ فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ»


Hakim-7928

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7928.


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَوْصِنِي وَأَوْجَزْ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكَ بِالْإِيَاسِ مِمَّا فِي أَيْدِي النَّاسِ، وَإِيَّاكَ وَالطَّمِعَ فَإِنَّهُ الْفَقْرُ الْحَاضِرُ، وَصَلِّ صَلَاتَكَ وَأَنْتَ مُوَدَّعٌ، وَإِيَّاكَ وَمَا تَعْتَذِرُ مِنْهُ»


Hakim-2000

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2000.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ، وَإِذَا أَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرَفَةَ عَيْنٍ


Hakim-7767

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7767.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ»


Hakim-2345

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கோ பிறருக்கோ தீங்கு இழைத்துக் கொள்வதும் இல்லை, (பதிலுக்குப்) பிறருக்குத் தீங்கு விளைவிப்பதும் இல்லை. எவர் (பிறருக்கு) தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தீங்கிழைப்பான் (தண்டிப்பான்). எவர் (பிறரை) சிரமப்படுத்துகிறாரோ, அல்லாஹ் அவரைச் சிரமத்திற்குள்ளாக்குவான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப, சரியான அறிவிப்பாளர்தொடரைக் கொண்டதாகும். ஆனால், (புகாரீ, முஸ்லிம் அறிஞர்களான) அவ்விருவரும் இதனை தங்களது நூல்களில் பதிவு செய்யவில்லை.


«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ، مَنْ ضَارَّ ضَارَّهُ اللَّهُ، وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ»


Next Page »