Category: அக்பாரு அஸ்பஹான்

Akhbar asbahan

Akhbar-Asbahan-675

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

675.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Akhbar-Asbahan-1509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-1208

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا فَإِنَّ الشَّيَاطِينَ لَا تَقِيلُ»


Akhbar-Asbahan-617

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

617. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا؛ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-700

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

700. உங்களில் யார் முடியை வளர்க்கிறாரோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! அதற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “தினமும் அதற்கு எண்ணெய் தேய்த்து, தலைவாருவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ رَبَّى مِنْكُمْ شَعْرًا فَلْيُكْرِمْهُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا كَرَامَتُهُ؟ قَالَ: «يَدْهُنُهُ، وَيُمَشِّطُهُ كُلَّ يَوْمٍ»


Akhbar-Asbahan-664

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

664. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தொழுவோருக்கும், இருபது ரஹ்மத் (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِنَّ لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ عَلَى هَذَا الْبَيْتِ، سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ» .

حَدَّثَ بِهِ عَنْهُ أَبُو بَكْرِ بْنُ مُوسَى


Akhbar-Asbahan-116

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

116. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தங்குவோருக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِنَّ لِلَّهَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ، تَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ، سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ»


Akhbar-Asbahan-240

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

240. திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«تَزَوَّجُوا وَلَا تُطَلِّقُوا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»