ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
இறையில்லமான கஅபாவைச் சுற்றி வரும்போது பேசுவது குறித்து வந்துள்ளவை.
960. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் நீங்கள் தவாஃப் செய்யும்போது பேசிக்கொள்ளலாம். அப்படி ஒருவர் பேசுவதாக இருந்தால் அவர் நல்லதைத் தவிர வேறு எதையும் பேசவேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி இப்னு தாவூஸ் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நபியின் சொல்லாக, அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
இந்தச் செய்தியின் அடிப்படையில், கஅபாவைச் சுற்றி வருபவர் ஏதேனும் அவசியமான பேச்சுகள், அல்லாஹ்வை திக்ரு செய்தல், கல்வி சார்ந்த விசயங்கள் தவிர மற்றவற்றை பேசாமலிருப்பது நல்லது என்று கல்வியாளர்களில் அதிகமானோர் கருதுகின்றனர்.
«الطَّوَافُ حَوْلَ البَيْتِ مِثْلُ الصَّلَاةِ، إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ، فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ»
சமீப விமர்சனங்கள்