இறையில்லமான கஅபாவைச் சுற்றி வரும்போது பேசுவது குறித்து வந்துள்ளவை.
960. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் நீங்கள் தவாஃப் செய்யும்போது பேசிக்கொள்ளலாம். அப்படி ஒருவர் பேசுவதாக இருந்தால் அவர் நல்லதைத் தவிர வேறு எதையும் பேசவேண்டாம்.
அறிவிப்பவர்: (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி இப்னு தாவூஸ் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நபியின் சொல்லாக, அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
இந்தச் செய்தியின் அடிப்படையில், கஅபாவைச் சுற்றி வருபவர் ஏதேனும் அவசியமான பேச்சுகள், அல்லாஹ்வை திக்ரு செய்தல், கல்வி சார்ந்த விசயங்கள் தவிர மற்றவற்றை பேசாமலிருப்பது நல்லது என்று கல்வியாளர்களில் அதிகமானோர் கருதுகின்றனர்.
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384 இறப்பு ஹிஜ்ரி 458 வயது: 74 முன்திரீ, நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631 இறப்பு ஹிஜ்ரி 676 வயது: 45 போன்ற அறிஞர்கள் நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகளுக்கு முன்னுரிமை தந்துள்ளனர்.
வேறு சில அறிஞர்களான இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் நபியின் சொல்லாக வந்துள்ள செய்திகளும், குறிப்பாக மேற்கண்ட செய்தியும் சரியானவை என்று கூறியுள்ளனர்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 162) 3044- وسئل عن حديث طاووس، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، قال الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام. فقال: اختلف فيه على طاووس؛ فرواه حنظلة بن أبي سفيان، عن طاووس، واختلف عنه؛ فرواه الثوري، عن حنظلة، عن طاووس، عن ابن عمر. رفعه أبو حذيفة، عن الثوري، ووقفه مؤمل. وكذلك رواه ابن وهب، وأبو عاصم، وإسحاق بن سليمان الرازي، عن حنظلة، موقوفا.
ورواه الحسن بن مسلم، عن طاووس، عن رجل أدرك النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يُسَمِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَرَوَاهُ عطاء بن السائب، عن طاووس، عن ابن عباس، واختلف عنه في رفعه: فرفعه فضيل بن عياض، وجرير، وموسى بن أعين بن أبي جعفر. ورواه إبراهيم بن ميسرة، عن طاووس. وقول من قال: عن ابن عمر، أشبه.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قال حدثنا حاجب بن سليمان، ومحمد بن مصعب الصوري، قالا: حدثنا مؤمل، قال: حدثنا سفيان، عن حنظلة، عن طاووس، عن ابن عمر، قال: الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قال حدثنا أحمد بن منصور، قال: حدثنا أبو حذيفة، قال: حدثنا سفيان، عن حنظلة بن أبي سفيان، عن طاووس، عن ابن عمر لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى الله عليه وسلم: الطواف بالبيت صلاة، فأقلوا فيه الكلام
இந்தச் செய்தியின் பல வகையான அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் இவற்றில், இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3044)
இந்தச் செய்தியை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். சிலர் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
அதாஉ பின் ஸாயிப் அவர்கள் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவரிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86 இறப்பு ஹிஜ்ரி 160 வயது: 74 ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97 இறப்பு ஹிஜ்ரி 161 வயது: 64 (இவ்வாறே இப்னு உயைனா) ஆகியோர் அறிவிக்கும் செய்திகள் சரியானவையாகும்.
இதனடிப்படையில் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97 இறப்பு ஹிஜ்ரி 161 வயது: 64 அவர்கள் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து இருவகையான அறிவிப்பாளர்தொடர்களை அதாவது நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளார். அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு உயைனா அவர்களும் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். எனவே முக்கியமான பலமான அறிவிப்பாளர்களும் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதால் அதாஉ பின் ஸாயிப் வழியாக வரும் செய்திகளும் சரியானவையே என்று இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 ஷுஐப் போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: அத்தல்கீஸ்-1/225, அல்மின்ஹாஜ்-8/368…)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
சமீப விமர்சனங்கள்