தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-42070-திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

A- A+

 


இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

இவர் தொகுத்த நூல்கள்:

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

இவரது மாணவர்கள்:

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.