7379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் தன் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.
அறிவிப்பவர்: (ரலி)
(அறிவிப்பாளர்) கூறுகிறார்: …
நான் இந்தச் செய்தியை உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சி காலத்தில் (அவர்களுக்குத்) தெரியப்படுத்தினேன். அப்போது அவர்கள், அபூபக்ர் பின் அம்ர் பின் ஹஸ்ம் அவர்களுக்கு, “முஹம்மது பின் ஸாபித் அவர்களிடம் அவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பற்றி கேளுங்கள். ஏனெனில் அவர் திருப்திக்குரியவர்,” என்று எழுதினார்கள். அவர், அவரை விசாரித்து உமர் (ரஹ்) அவர்களுக்கு எழுதினார். அதன் பிறகு, உமர் (ரஹ்) அவர்கள் பெண்கள் (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைவதற்கு தடை விதித்தார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட வார்த்தை அமைப்பு யஃகூப் பின் ஸுஃப்யான் அவர்கள் (அறிவித்த) ஹதீஸின் வார்த்தைகளாகும்.
யஹ்யா பின் மயீன் அவர்கள், ‘அவர் இப்னு ஹுனைன்’ என்று கூறவில்லை. மேலும், விருந்தினரை உபசரிப்பது பற்றியும் அவர் குறிப்பிடவில்லை.
இங்குக் குறிப்பிடப்படும் அப்துல்லாஹ் என்பவர் அல்கத்மீ கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆக இருப்பின், அவரது தந்தையின் பெயர் யஸீத் ஆகும்.
ஆயினும், இப்னு ஸுவைத் உடைய நூலில், இவர்கள் இருவர் (யஃகூப் மற்றும் யஹ்யா) வழியாகவும் (இந்த அறிவிப்பு) இருந்தது.
எங்களது ஆசிரியர் அபூஅப்துல்லாஹ் அல்ஹாஃபிழ்-ஹாகிம் இமாம் அவர்கள் இதனை உமர் பின் அப்துல்அஸீஸ் வழியாக அறிவித்துள்ளார். யஹ்யா பின் அய்யூப் வழியாக அவர், அபூயூஸுஃப்-யஃகூப் பின் இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று கூறியதாக அறிவித்தார்.
இவ்வாறே ஹாகிம் அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் வழியாக லைஸ் பின் ஸஃத் —> யஃகூப் பின் இப்ராஹீம் —> அப்துர்ரஹ்மான் பின் ஹிம்யர் —> முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் யஸீத் … என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.
أَخْبَرَنَا أَبُو عَلِيُّ بْنُ شَاذَانَ الْبَغْدَادِيُّ بِهَا، أنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ النَّحْوِيُّ، نا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، نا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ، وَأَخْبَرَنَا أَبُو نَصْرٍ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ قَتَادَةَ، نا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَامِدٍ الْعَطَّارُ، أنا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، نا يَحْيَى بْنُ مَعِينٍ، نا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ وَهُوَ ابْنُ حُنَيْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ سُوَيْدٍ – وَفِي رِوَايَةِ يَعْقُوبَ: عَنْ عَبْدِ اللهِ بْنِ سُوَيْدٍ، وَلَمْ يَقُلِ الْخَطْمِيُّ – عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ مِنْ نِسَائِكُمْ فَلَا يَدْخُلْنَ الْحَمَّامَ “
قَالَ: فَنَمَيْتُ ذَلِكَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي خِلَافَتِهِ، فَكَتَبَ إِلَى أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ سَلْ مُحَمَّدَ بْنَ ثَابِتٍ عَنْ حَدِيثِهِ فَإِنَّهُ رِضًا، فَسَأَلَهُ ثُمَّ كَتَبَ إِلَى عُمَرَ فَمَنَعَ عُمَرُ النِّسَاءَ مِنَ الْحَمَّامِ،
لَفْظُ حَدِيثِ يَعْقُوبَ، وَلَمْ يَقُلْ يَحْيَى: وَهُوَ ابْنُ حُنَيْنٍ، وَلَمْ يَذْكُرْ إِكْرَامَ الضَّيْفِ، وَعَبْدُ اللهِ هَذَا إِنْ كَانَ الْخَطْمِيَّ فَاسْمُ أَبِيهِ يَزِيدُ، وَلَكِنْ كَانَ فِي كِتَابِ ابْنِ سُوَيْدٍ عَنْهُمَا جَمِيعًا، رَوَاهُ شَيْخِنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ يَحْيَى، حَدَّثَنِي أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، وَرَوَاهُ مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ صَالِحٍ، عَنِ اللَّيْثِ، عَنْ يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حِمْيَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ
رَوَاهُ شَيْخِنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ مِنْ حَدِيثِ عُمَرَ, وَعَنْ يَحْيَى (1)
(1) في طبعة دار الكتب العلمية: “مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ يَحْيَى”.
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7379.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
(நூல்: இலலுல் ஹதீஸ்-192)
8 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- லைஸ் பின் ஸஃத் …
பார்க்க: இக்ராமுள் ளைஃப்-37, மகாரிமுல் அக்லாக்-233, அல்முஃஜமுல் கபீர்-3873, அல்முஃஜமுல் அவ்ஸத்-8658, மகாரிமுல் அக்லாக்-தப்ரானி-221, ஹாகிம்-7783,
- அம்ர் பின் ரபீஃ …
பார்க்க: இப்னு ஹிப்பான்-5597, ஜுஸ்உல் ஹஸன் பின் ஷாதான்-24, குப்ரா பைஹகீ-14807, ஷுஅபுல் ஈமான்-7379, தாரீகு திமிஷ்க்-, இத்ஹாஃபுல்.., அல்மதாலிபுல் ஆலியா-180,
- உமர் பின் அப்துல்அஸீஸ் —> முஹம்மத் பின் ஸாபித்
பார்க்க: முஸ்னத் உமர் பின் அப்துல்அஸீஸ்-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4010,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன?
இதில்,
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.”
என்று தடை வந்துள்ளதால் குற்றாலம் போன்ற பொதுக் குளிப்பிடங்கள் மட்டுமல்லாமல், சிலருடைய தோட்டங்களில் பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ள பொதுக் குளிப்பிடங்களிலும் பெண்கள் குளிக்கக் கூடாதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, தயவுசெய்து இதை தெளிவுபடுத்துங்கள்
வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடை தான். பார்க்க: அபூதாவூத்-4010.
பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள மரங்களே திரைகளாக இருக்கும் இடங்களில் கூட பெண்கள் ஒன்றாக சேர்ந்து குளிக்கக் கூடாதா என்பதுதான் முக்கியமான கேள்வி.
அப்படியானால் அவரவர் சொந்த வீடுகளில் கூட கொல்லைப் புறங்களில் பெரிய தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு, தாய், மகள்கள், தாயின் சகோதரிகள், பேத்திகள் என்று குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து குளிப்பார்கள். இதுபோன்ற எதுவுமே கூடாதா?
வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?
நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே “என்றாலும் வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடை தான். பார்க்க: அபூதாவூத்-4010” என்று குறிப்பிட்டுள்ளேன்.
1 . பாதுகாப்பு, திரைமறைவு இருக்க வேண்டும்.
2 . பெண்கள் பொதுவாக மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்துக் குளிக்க வேண்டும்.
3 . குற்றாலம், நதி, ஆறு போன்ற பலரும் பார்க்கும் இடங்களில் பெண்கள் ஆடையுடன் குளித்தாலும் அது ஆடைஇல்லாமல் குளிப்பது போன்று தான்.
இதுவும், நமக்கு சொந்தமான இடங்களில் நமது குடும்ப பெண்கள் குளிப்பதும் ஒன்றல்ல. ஹதீஸில் வந்துள்ள தடை பொதுவாக அன்றைய காலத்தில் இருந்த திறந்தவெளி பொதுக்குளிப்பிடங்களை வைத்து கூறப்பட்டதாகும்.
அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி பொதுக்குளிப்பிடம் என்று ஆகுமா?
அதுபோல், குடும்பப் பெண்கள் மட்டும் அல்லாமல், நமக்கு தெரிந்த சிலரின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் போடப்பட்டோ, அல்லது சுற்றியுள்ள மரங்களே திரைகளாக இருக்கும் இடங்களில் பெண்கள் ஒன்றாக சேர்ந்து குளிப்பது திறந்தவெளி பொதுக் குளிப்பிடம் என்று ஆகுமா?